8-Grade-System

கர்நாடக இசை, பரதநாட்டியம் மற்றும் நுண்கலைகளுக்கான பிரிட்ஜ் அகாடமியின் 8 கிரேடிங் சிஸ்டம்

வெளிநாடுகளில் உள்ளதைப் போல இந்திய மாணவர்கள் தங்கள் மனதிற்கு பிடித்தவற்றை, கூடுதலாகவோ அல்லது வழக்கமான பாடக் கல்வியுடன் இணைந்தோ முழு மூச்சுடன் தொடர முடியாதவர்களாக இருப்பதைக் காண்கிறோம். இசை, நடனம், கலை மற்றும் கைவினைப் பொருட்களை உருவாக்குதல் போன்றவற்றை இங்கு உதாரணங்களாகச் சொல்லலாம். நமது கல்வி முறை பள்ளிப் படிப்பைத் தவிர விளையாட்டு மற்றும் கலை போன்றவற்றை ஊக்குவிப்பதே இல்லை

மேலும் இசை மற்றும் நுண்கலை ஆசிரியர்கள் மாணவர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்த முயன்று வருகிறார்கள். இருந்தாலும் இசை, நாட்டியம் மற்றும் நுண்கலைகளை பொறுத்தவரை கற்பிக்கும் முறைகள், பலவிதமாக வேறுபட்டுள்ளன. ஒரு பொதுவான கொள்கையோ அல்லது அட்டவணையோ இல்லை. ஆகையால் கலைக்குத் தேவையான அடிப்படைக் கல்வியை கிரேடு சிஸ்டம் மூலம் ஒன்றிணைக்க முடியும் என்றும், அத்துடன் சர்வதேச தரத்துடன் நம்முடைய பாரம்பரிய கலையை ஒரே குடையின் கீழ் இணைத்துக் கொண்டு அதனை முன்னெடுக்கவும் முடியும் என்ற எண்ணத்தில் Art for All என்ற தாரக மந்திரத்துடன் செயல் பட்டு வரும் பிரிட்ஜ் அகாடமி தன்னுடைய கல்விப் பார்வையை ஏனைய நுண்கலைகளுக்கும் விரிவுபடுத்துகிறது..

இசை மற்றும் நுண்கலைத் துறையில் சிறந்து விளங்கும் அறிஞர்கள் மற்றும் நிபுணர்களின் உதவியுடன் பிரிட்ஜ் அகாடமி இதற்கான ஒரு வரைமுறையை அதற்கான பாடத்திட் டத்துடன் கொண்டு வந்துள்ளது. நிபுணர்கள் குழுவானது நமது பாரம் பரிய முறைப்படி வந்த ஆசான் களையும், மற்றும் இசைத் துறையில் தேர்ச்சி பெற்ற முனைவர்களையும் ஒருங்கிணைத்து முடிவுகளை எடுத்துள்ளது.

நமது இந்தியக் கலையின் மரபு, அதன் கலாசாரம், இந்த இரண்டையுமே எந்தவிதத்திலும் சமரசம் செய்து கொள்ளாத முறையில் பாடத்திட்டங்களும் வரைமுறைகளும் நிலை செய்யப்பட்டுள்ளன.

எல்லா கலை வடிவங்களும் பல்வேறு பரிமாணங்களை கொண்டவை. இவைகளை மதிப்பீடு செய்வது என்பது ஒரு கடினமான செயல். எனவே, நாம் எந்த அமைப்பை உருவாக்குகிறோமோ, அது இசைப் பயிற்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் ஆகிய இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ளும்படி இருக்க வேண்டும்.

பிரிட்ஜ் அகாடமி தற்பொழுது இருக்கும் கற்பிக்கும் முறைகள் வலுவானதாகவே இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த க்ரேடிங் கிரமங்கள், ஆசிரியர்களும் மாணவர்களும் கற்பித்த மற்றும் கற்றுக் கொண்ட திறன்களை பரிசோதிப்பதற்கான ஒரு தடத்தை வழங்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இந்த முயற்சியை எடுத்துள்ளது. இந்த தர ஆய்வு முறை மாணவர்களை அதிக முயற்சி செய்ய வைக்கும், கடினமாக உழைக்க வைக்கும். மேலும் இது அவர்களை நேர்மையுடன் பயிற்சி செய்யவும் வைக்கும்.

தற்பொழுது கலை வடிவங்கள் குறித்து மதிப்பிடுவது என்பதை நடைமுறையில் நாம் காண முடிவதில்லை என்றே ஆகிவிட்டது. பிரிட்ஜ் அகாடமி சர்வதேச நடைமுறைகளைப் பின்பற்றி நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. இதன் பரிந்துரைப்படி ஒவ்வொரு கலை வடிவத்திற்கும் 8 தரங்களை வடிவமைத்துள்ளது. இந்த 8 தரங்கள் கொண்ட முறைமையானது அவரவர்களின் திறனுக்கேற்ப மாணவர்களை தக்க இடத்தில் அமர்த்தும்.

இதன் காரணமாக அகாடமியானது ஆசிரியர்களுக்கு ஒரு வகையில் உதவி புரிந்துள்ளது. திறமையுடன் ததும்பும் மாணவர்களது கலையாற்றலை வளர்க்கவும், அவர்களிடம் உள்ள கலைத் திறனை வெளிப்படுத்தி ஊக்குவிக்கவும், இந்தத் தர நிர்ணய முறை உதவும் எனலாம்.

பிரிட்ஜ் அகாடமி மீடியா பற்றிய தேர்ந்த பயிற்சிகளை பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது. இந்தப் பகுதியில் ஆற்றலை மாணவர்களுக்கு வழங்குவதில் முதன்மையில் உள்ள ஒரு நிறுவனமாகத் தன்னை வெளிப்படுத்தியுள்ளது. பிரிட்ஜ் அகாடமி பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 6 ஆண்டுகளாக மீடியா தொடர்பான பட்டங்களையும் மற்றும் டிப்ளமாக்களையும் வழங்கி வருகின்றது.

இந்த அகாடமியில் படித்துத் தேறியவர்கள் படத்தயாரிப்பாளர்களாகவும், இயக்குனர்களாகவும், ஒளிப்பதிவாளர்களாகவும் திகழ்கிறார்கள். மற்றும் சிலர் திரைப்படத் துறையின் தயாரிப்பு நிறுவனங்களிலும், செயற்கைக்கோள் (ஸாடிலைட்) சேனல்கள், விளம்பர நிறுவனங்கள் மற்றும் இதர ஊடகங்களில் பணியாற்றி வருகிறார்கள்.

ஒரே அமைப்பின் கீழ் பல்வேறு விதமான கற்பிக்கும் முறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், பிரிட்ஜ் அகாடமி, இசை, நடனம் மற்றும் நுண்கலை ஆகியவற்றிற்கான பாடத்திட்டங்களில் ஒரு பொதுவான, சீரான தரக் கோட்பாட்டை அமைத்திட வழி வகுத்திருக்கிறது.

எல்லோருக்கும் கலை (Art for All) என்ற நோக்கத்தில் பயணத்தைத் தொடங்கியிருக்கும் ஃப்ரிட்ஜ் அகாடமிக்கு தோள் கொடுங்கள். அடுத்த தலைமுறை கலைஞர்களை சான்றிதழ்களுடன் உருவாக்குவோம்